தம்ம பந்தம்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உள்ள உறவு என்பது இன்று நேற்றல்ல பௌத்த மதம் உருவாதற்கு முன்பிலிருந்தே மொழியின் அடிப்படையில் தொடங்கியது. உலக முழுவதும் பௌத்த மதம் பரவி இருந்தாலும் தென்னிந்தியா மற்றும் தமம்பாணி என்கின்ற இலங்கை பகுதிக்கு மட்டுமே உரித்தான பல கூறுகள் உள்ளதை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்படியான தனித்த கூறுகளுக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதனை மொழி அடிப்படையில் தமிழ் பௌத்தம் என்கிற வரையரையில் நாம் புரிந்துகொள்ளலாம். அயோத்திதாசர் பண்டிதர் இலங்கை சென்று தீட்சைப் பெற்ற பிறகு அங்கு வாழும் பஞ்சமர்களுடன் தன் வாழ்நாள் இறுதிவரை தொடர்பில் இருந்தார். தமிழன் இதழுக்கு கொழும்பு பகுதியில் ஜோன் என்பவர் ஏஜண்டாக இருந்ததன் மூலம் இதழுக்கான வாசகர்கள் இருந்ததையும் அதன் தாக்கத்தையும் நம்மால் உணர முடிகிறது. பண்டிதரின் ஊக்கதால் மூன்று பௌத்த சங்கங்கள் தொடங்கி 1930ம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டுள்ளது. பண்டிதரின் தொடர்ச்சியாக பாபாசாகிப் அம்பேத்கர் 1950 ஆம் ஆண்டு இலங்கை பயணத்தில் கண்டியில் ஒரு மாதம் தங்கியுள்ளார். அங்கு செயல்பட்ட பஞ்சமர் இயக்கங்களின் தலைவர்களையும், பௌத்த சங்கங்களிடமும் உரையாடல் நி...