Posts

மதுரை பந்தல்குடி நடராஜான் (1939 - 2013)

மதுரை வட்டார பகுதியில் பட்டியல் சமூக ஆளுமைகள் தொடர்ந்து எல்லா காலங்களிலும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்கு பந்தல்குடி நடராஜன் ஒரு சான்று மட்டுமே, மதுரை மாநகரில் கோரிப்பாளையம் அருகே இருக்கும் பந்தல்குடி பகுதியில் சுந்தரம்- முத்தாவுடையம்மாள் ஆகியோருக்கு 05 ஆவது பிள்ளையாக 13 ஏப்ரல் 1939 அன்று நடராஜன் பிறந்தார். பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 29 டிசம்பர் 1945 அன்று மதுரைக்கு வந்த பொழுது பந்தல்குடி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அன்று எட்வர்ட் மன்றத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் உரையை கேட்கவும் பந்தல்குடிலிருந்து மக்கள் திறளாக கலந்து கொண்டுள்ளனர்.ஆறு வயது சிறுவனாக இருந்த நடராஜன் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை காணும் வாய்ப்பை பெற்றார். அன்றிலிருந்து தன் இறுதி காலம் வரை கொள்கை மாறாத அம்பேத்திகரியவாதியாக வாழ்ந்தவர். மதுரையில் உள்ள மதுரை யூனியன் கிறிஸ்டியன் உயர் நிவைப்பள்ளியில் 1958 ஆம் ஆண்டு படித்து முடித்தார். 1960 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புது முக வகுப்பு (PUC) படித்து முடித்தார். கல்லூரி முடிந்ததும். 1961 ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சியில் எழுத்தர் பணியில் வேலையில...

பூவை.மூர்த்தி - (1953-2002)

சென்னைக்கு மேற்கே பூந்தமல்லி அருகில் ஆண்டர்சன்பேட்டையை பூர்வீகமாக கொண்டவர். ஐந்தாம் வகுப்பு வரை சொந்தக் கிராமத்திலேயே இருந்த ஆரம்பப் பள்ளியில் படித்தார். திருமழிசை உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.-யை முடித்தார். (பிறகு பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் பியு.சி.-யும் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ.-வும் தஞ்சை புஷ்பம் கல்லூரியில் எம்.ஏ.-வும் படித்தவர் இறுதியில் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படித்து வழக்கறிஞரானார். கல்லூரி காலங்களில் மாணவ தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அந்தளவிற்கு சக நண்பர்களுடன் எளிமையாக பழகிக் தன்மை கொண்டவர். சென்னையில் M.C. ராஜா விடுதியில் தங்கி படித்த காலகட்டத்தில் ஆரிய சங்காரன் பேசும் கூட்டங்களில் கலந்துகொண்டு அவரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வர காரணமாக அமைந்தது. முதலில் ஐதராபாத்தில் உள்ள ஆந்திர வங்கியில் வேலையில் அமர்ந்தார். பிறகு சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் இறுதியாக சென்னை ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது பட்டியல் மக்களுக்கு முழு நேரமும் பணியாற்றிட தன்னுடைய பணியை துறந்துவிட்டு சமூக பணிக்கு தி...

செப்டம்பர் மாத நீலம் தலையங்கம் வரலாற்று பிழை

  செப்டம்பர் மாத நீலம் தலையங்கம் வரலாற்று பிழை ஒய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்கி அதன் பரிந்துரையின் பேரில் தமிழக சட்ட மன்றத்தில் 2009  ஆண்டு அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் தி.மு .க அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் மூலம் அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் அனைத்து துறை பணிகளிலும், பட்டியல் சாதிகள் அனுபவித்துவரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பிரித்து மூன்று விழுக்காட்டினை 'அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீடு' என்று அருந்ததியினருக்கு தமிழக அரசு வழங்கியது. இத்தகைய தமிழக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பட்டியல் சாதிக்குள் அருந்ததியர் ஒரு பிரிவினராகவும், அருந்ததியர் அல்லாத பிற பட்டியல் சாதிகள் ஒரு பிரிவினராகவும் பிரிக்கப்பட்டனர். பத்திரிக்கை துறையில் சூத்திரர் மற்றும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் அனைத்து ஊடகங்களும் உள் ஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்து எழுதியுள்ளது. முற்போக்கு சாதி இந்துக்கள் ஆதரவு தெரிவித்து தன்னுடைய சமுக நீதியை நிலைநாட்டியுள்ளனர். அந்த வர...

வாத்தியார் வேலு 1916 -1982

 வாத்தியார் வேலு 1916 -1982                                       அருள் முத்துக்குமரன்  தஞ்சை பகுதியை பற்றி பேசும்போதெல்லாம் கூலி உயர்வு சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் நடந்த சாதி ரீதியான வன்கொடுமைகள் குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே அங்கு செயல்பட்ட தலித் ஆளுமைகள் பற்றிய கவனம் பெறாமலே போகிறார்கள். அந்த வகையில் மயிலாடுதுறை பகுதியில் ஆசிரியர் வேலு என்பவர் பட்டியல் சமுக மக்களின் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது யாரும் அறியாமல் இருந்தது. சுதந்திரத்துக்கு முன்பே திருவள்ளுவர் பெயரில் மாணவர் விடுதியை நடத்தி மயிலாடுதுறை வட்டார மக்களுக்கு கல்வி போதித்து வந்தார். அதன் பின்பு பெடரேஷன் அமைப்பில் தொண்டு வீராசாமி, நடுதிட்டு கூத்தரசன் கே.பி.எஸ்.மணி போன்றவர்களுடன் இணைந்து இழி தொழில் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மக்கள் பணியில் இருந்ததால் தான் பணியாற்றிய ஆசிரியர் பணியை துறந்து சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற தேர்தலில் மயி...

ஆசிரியர் இல்லாமல் சென்டம் அடித்த ஆதிதிராவிட மாணவர்கள்

ஆசிரியர் இல்லாமல் சென்டம் அடித்த ஆதிதிராவிட மாணவர்கள்  அருள் முத்துக்குமரன்  பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6ந் தேதி வெளியானது. தேர்வு முடிவுகளில் தனியார் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, அரசுப் பள்ளி, மாநகராட்சி பள்ளி, நகராட்சி பள்ளி, சமூக நலத்துறைப்பள்ளி , கள்ளர் சீர்திருத்த பள்ளி என்று மேற்கண்ட பள்ளிகளின் சாதனைகளை பட்டியலிடும் தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளை பற்றி எதுவும் பேசுவதில்லை. அதன் முன்னேறிய தேர்ச்சி விகிதம் பற்றி அரசு வெளிபடுத்தவில்லை. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 126 மேல்நிலை பள்ளியின் தேர்ச்சி விகிதம் தற்போது 91.15% ஆக இருக்கிறது. இவ்வாறான தேர்ச்சி சதவீதம் 2022ல் 83% ஆகவும், 2023ல் 88% ஆகவும், குறைந்து இருந்தது. கடந்த இரண்டு கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி நல பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கூடியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இதில் இந்த ஆண்டு 26 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 100% தேர்ச்சியும் மற்றும் 14 பழங்குடியின பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சி...

சூத்திரமயமாகும் தலித் தலைமை

Image
சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தர் அவர்களால் பட்டியல் இன மாணவர்களின் கல்விக்காக தொடங்கட்டபட்ட நந்தனார் பள்ளியின் முன்னாள் மாணவர்களை பொன்னாங்கண்ணிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் முயற்சியால் ஒருங்கிணைத்து "நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள்" என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். இந்த அமைப்பில் பெரும்பாலும் சிதம்பரம் வட்டார பகுதி பட்டதாரிகள் இருந்தனர். நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள் அமைப்பு சுவாமி சகஜானந்தர் பெயரில் I.T.I மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வேண்டும் என்கிற கோரிக்கைகளை எண்பதுகளின் தொடக்கத்தில் அரசுக்கு முன்வைத்தது. அதனை தொடர்ந்து மார்ச் 1983 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நந்தனார் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ். சுவாமிநாத அய்யர் தலைமையில் விவேகானந்த ஆங்கில பள்ளியில் சுவாமி சகஜானந்தர் பெயரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்த அமைப்பு முன்வைத்து. இப்போராட்டத்தில் முதல் படியாக நந்தனார் பள்ளியின் வளாகத்தில் அரசு I.T.I கல்லூரியை அரசு நிறுவியது இந்தமைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள் அமைப்பு தொடர்ந்து அரசுக்கு கொடுத...

தமிழர்களின் குல வழிபாடும் பௌத்தமும்

Image
  தமிழர்களின் குல வழிபாடும் பௌத்த மும் ஒரு சமூகத்தின் வரலாற்றை யதார்த்தத்தில் இருந்தே கட்டமைக்க முடியும் அதுவே சரியானதும் ஆகும். மனிதனின் ஒவ்வொரு அசைவையும் அவனது பண்பாடே தீர்மானிக்கிறது. பௌத்த மதத்தில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பு புத்த தம்மத்தின் குறியீடான அறச்சக்கரம் மற்றும் அவரின் பாதம் அல்லது பாத பீடிகை வணங்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த பண்பாட்டு எச்சத்தை இன்றளவும் நம்முடைய  வாழ்வில் பார்க்க முடியும். இன்றைய சடங்கு முறைகள் நமது தொல்குடி மரபின் பண்பாட்டு எச்சமே, பண்பாடு ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்துக்கு உட்பட்ட நவீன தன்மையை அடைந்து வேறு வடிவம் எடுத்தாலும் அதன் உள்ளார்ந்த பண்பு மாறுவதே யில்லை, பண்பாட்டு கூறுகள் உருவாதற்கு வலுவான காரணம் இல்லாமல் சாத்தியமில்லை அதனால் பண்பாடு என்பது என்னை பொருத்தவரை இலக்கண முறைப்படி  காரணபெயர் என்பதே பொருத்தமாகும். அப்படியான ஒரு தொல்  மரபுதான் பாதவழிபாடு என்கிற பண்பாட்டு வழக்கம். பாதத்தை பாதுகாக்கும் மரபு இன்றும் நம்மிடம் தொடர்கிறது. சில நாட்களுக்கு முன்பு என் நண்பரின் உறவினர் இறப்புக்கு சென்றுருந்தேன் .இறந்த பெரியவருக்...