சூத்திரமயமாகும் தலித் தலைமை

சிதம்பரத்தில்



சுவாமி சகஜானந்தர் அவர்களால் பட்டியல் இன மாணவர்களின் கல்விக்காக தொடங்கட்டபட்ட நந்தனார் பள்ளியின் முன்னாள் மாணவர்களை பொன்னாங்கண்ணிமேடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவர் முயற்சியால் ஒருங்கிணைத்து "நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள்" என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். இந்த அமைப்பில் பெரும்பாலும் சிதம்பரம் வட்டார பகுதி பட்டதாரிகள் இருந்தனர். நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள் அமைப்பு சுவாமி சகஜானந்தர் பெயரில் I.T.I மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி வேண்டும் என்கிற கோரிக்கைகளை எண்பதுகளின் தொடக்கத்தில் அரசுக்கு முன்வைத்தது.

அதனை தொடர்ந்து மார்ச் 1983 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நந்தனார் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ். சுவாமிநாத அய்யர் தலைமையில் விவேகானந்த ஆங்கில பள்ளியில் சுவாமி சகஜானந்தர் பெயரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்த அமைப்பு முன்வைத்து. இப்போராட்டத்தில் முதல் படியாக நந்தனார் பள்ளியின் வளாகத்தில் அரசு I.T.I கல்லூரியை அரசு நிறுவியது இந்தமைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். நந்தனார் பள்ளி பழைய மாணவர்கள் அமைப்பு தொடர்ந்து அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக 2014 யில் அதிமுக அரசு ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் சிதம்பரம் நந்தனார் பள்ளி வளாகத்தில் அரசு சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும் என்கிற அரசாணையை வெளியிட்டது. 

இதற்கு தேவையான இடம் நந்தனார் பள்ளி வளாகத்தில் இல்லாத பட்சத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி சட்டமன்றத்துக்கு உட்பட்ட நாஞ்சலூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமரன் பிள்ளை த/பெ அகோரம் பிள்ளை என்பவர் பட்டியலின மக்களின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக காட்டுமன்னார்குடி வட்டத்துக்கு உட்பட்ட சாவடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 47 ஏக்கர் நிலத்தை பட்டியலின மக்களுக்கு பயன்பட வேண்டி தமிழக அரசின் ஆதிதிராவிடத்துறைக்கு நலத்துறைக்கு 2000-2004 இடைப்பட்ட காலத்தில் தானமாக வழங்கினார்.

இந்நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை கையகப்படுத்தி சாவடி கிராமத்தில் பாலிடெக்னிக் கல்லூரியை தொடங்கியது. இக்கல்லூரி தற்காலிகமாக சிதம்பரம் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரியில் இயங்கும்போது முதல் ஆண்டு சேர்க்கை ஆதிதிராவிட நலத்துறை விதிகளின்படி நடைபெற்றது. இந்த சேர்க்கையானது 2017-2018 ஆண்டுகளில் நடைபெற்று பின்னர் சேர்க்கை ரத்து செய்து அதன் மாணவர்களை தமிழக அரசின் கீழ் இயங்கும் புத்தூர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றினர். அதற்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கிய கல்லூரியை மாற்றி தமிழக அரசின் கீழ் இயங்க எந்த அறிவிப்பும் இல்லாமல் செயல்பட அதிமுக அரசு வழிவகுத்தது.

பட்டியல் மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே தானமாக வழங்கிய நிலத்தில் ஆதிதிராவிட நலத்துறையால் தொடங்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி பின்னர் தமிழக அரசால் ஆதிதிராவிட நலத்துறை கட்டுப்பாட்டில் இருந்து பொது துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து தொடங்கப்பட்டதை பொது துறைக்கு மாற்றப்பட்டதால், பட்டியல் மக்களின் மேம்பாடானது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட நலத்துறைக்கு கீழ் பாலிடெக்னிக் கல்லூரி இருக்குமானால் 80% மாணவர் சேர்க்கையும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருப்பர்.ஆனால் தமிழக அரசு பொதுதுறைக்கு மாற்றியதால் பட்டியல் சாதிகளின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டுள்ளது ஆகையால் பொதுதுறைக்கு மாற்றப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியை மீண்டும் ஆதிதிராவிட நலத்துறைக்கு கீழ் திமுக அரசு கொண்டுவந்து பட்டியல் மக்கள் பயன்பெறும் வகையில் மாணவர்களையும், பேராசிரியர் மற்றும் இதர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

அரசியல் ரீதியாக பார்த்தல் இக்கல்லூரி காட்டுமன்னார்கோவில் சட்டமன்றம், சிதம்பரம் பாராளுமன்றம் தொகுதிக்குல் இடம்பெற்றுள்ளது. இரண்டுமே விடுதலை சிறுத்தைகள் கட்டுபாட்டில் உள்ளது. மேலும் சிறுத்தைகளின் வாக்கு வங்கி கடலூர் மாவட்டமே பிரதானமாக இருக்கிறது. இக்கல்லூரி தொடர்பான பிரச்சனைகளை இவர்களின் கவனத்துக்கு சென்ற பிறகும் தனக்கும் அதற்கும் எந்த தொடர்பு இல்லாததுபோல் அண்ணன் தொல்.திருமாவளவன் மற்றும் சிந்தனை செல்வம் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். இப்படி நம் சமுக இளைஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பை கைநழுவி சென்றது எவ்வளவு பெரிய சமுக பின்னடைவை சிதம்பரம் வட்டார பகுதியில் உருவாக்கும் என்பதை அறியாமல் இருப்பது எந்த விதத்தில் சரியாகும்.

இந்த பிரச்சனையை SC/ST ஆணையத்திடம் முறையிட்டால் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எங்களுக்கு என்று தனி அலுவலகம் அரசு இன்னும் அமைக்கவில்லை அதனால் மனுவாக எங்களால் பெறமுடியாது என்று அலுவலக பணியாளர்கள் கூறுகிறார்கள். அரசு செயல்படுத்த மறுப்பது சரியே ஏனென்றால் சூத்திர அரசு அப்படித்தான் செயல்படும். ஆனால் தலித் கட்சியின் சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இப்படி எளிய மக்கள் கொடுக்கும் அதிகாரத்தை இந்த மக்களுக்கு பயன்படுத்தாமல் யாருக்காக பணி செய்கிறார்கள் என்பது மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இவர்களின் செயல் சூத்திரர்கள் தலித்களை அணுகும் மேதமையுடன் அணுகுவது எதிர்காலத்தில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு நன்மையாக முடியாது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. மேற்கண்ட பிரச்சனைக்கு எளிய பட்டியல் மக்கள் யாரை அணுகுவது என்று பரிதாப நிலையில் இருப்பது வேதனையாக இருக்கிறது.

உங்கள் வாழ்வின் துயரங்களை துடைத்து ஒளியேற்றுவேன் என்று வாக்கு சேகரித்து வெற்றிபெற்றவர்கள் தற்போது மக்களிடம் அன்னியபட்டு நிற்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி தன்னை ஒரு பொது கட்சியாக உணர்வதில் தப்பில்லை அதற்காக அக்கட்சி உழைக்கலாம் ஆனால் வாக்காளர்கள் மட்டுமே தலித்தாக இருக்க நினைப்பது எந்தவிதத்தில் நியாயம். இப்படி பட்டியல் மக்களின் உண்மையான பிரச்சினைகள் பேசாமல் இருப்பது தொடர்ந்தால் மக்களிடம் அன்னியபடுவதை தவிர்க்க முடியாது என்பதை எப்போது உணர்வார்கள் என்று தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

வாத்தியார் வேலு 1916 -1982