Posts

Showing posts from February, 2022

தமிழர்களின் குல வழிபாடும் பௌத்தமும்

Image
  தமிழர்களின் குல வழிபாடும் பௌத்த மும் ஒரு சமூகத்தின் வரலாற்றை யதார்த்தத்தில் இருந்தே கட்டமைக்க முடியும் அதுவே சரியானதும் ஆகும். மனிதனின் ஒவ்வொரு அசைவையும் அவனது பண்பாடே தீர்மானிக்கிறது. பௌத்த மதத்தில் உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பு புத்த தம்மத்தின் குறியீடான அறச்சக்கரம் மற்றும் அவரின் பாதம் அல்லது பாத பீடிகை வணங்கும் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த பண்பாட்டு எச்சத்தை இன்றளவும் நம்முடைய  வாழ்வில் பார்க்க முடியும். இன்றைய சடங்கு முறைகள் நமது தொல்குடி மரபின் பண்பாட்டு எச்சமே, பண்பாடு ஒவ்வொரு காலத்திலும் அந்த காலத்துக்கு உட்பட்ட நவீன தன்மையை அடைந்து வேறு வடிவம் எடுத்தாலும் அதன் உள்ளார்ந்த பண்பு மாறுவதே யில்லை, பண்பாட்டு கூறுகள் உருவாதற்கு வலுவான காரணம் இல்லாமல் சாத்தியமில்லை அதனால் பண்பாடு என்பது என்னை பொருத்தவரை இலக்கண முறைப்படி  காரணபெயர் என்பதே பொருத்தமாகும். அப்படியான ஒரு தொல்  மரபுதான் பாதவழிபாடு என்கிற பண்பாட்டு வழக்கம். பாதத்தை பாதுகாக்கும் மரபு இன்றும் நம்மிடம் தொடர்கிறது. சில நாட்களுக்கு முன்பு என் நண்பரின் உறவினர் இறப்புக்கு சென்றுருந்தேன் .இறந்த பெரியவருக்...

இரும்பு மங்கை மாயாவதி

Image
  தற்போது நடைபெறும் உத்திரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மற்றும் தேர்தல் நிலவரம் பற்றி அறிந்துகொள்ள எப்போதும் விட தற்போது  கூடுதல் ஆவலாக உள்ளேன். காரணம் பெரிய மாநிலம் என்பதை கடந்து ஒரு தலித் நான்கு முறை முதல்வராக முடிந்த மாநிலம் மேலும் தலித் சமூகம் விழிப்படைந்த மாநிலமும் உத்திரபிரதேசம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பகுஜன் சமாஜ் கட்சி 403 சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்து மிக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த முறையும் பகுஜன் சமாஜ் பொது தொகுதியிலும் பட்டியல் சமூக வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. கடைசியாக மாயாவதி முதல்வராக  இருந்த சமயத்தில் கணிசமான பொது தொகுதியில் தலித் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிந்தது குறிப்பிடத்தக்கது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு அடுத்து பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை ஆக்ரா போன்ற 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ளது. தனி தொகுதியை கடந்து பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் ஏற்படுத்திய தாக்கமே முக்கியம். அந்த வகையில் செல்வி மாயாவ...