Posts

Showing posts from September, 2021

புகைப்படங்கள்

Image
  2004 யில் சீர்காழியில் எடுக்கப்பட்ட புகைப்படம்

அதிகாரத்துடன் உரையாடிய ஆதிநாயகன் -என்.சிவராஜ்

Image
  பேராசிரியர் என்.சிவராஜ் அவர்கள் மத்திய சட்டமன்றம் (1937-47) மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் (1945-46) இருந்த காலகட்டத்தில் அவரின் பணிகள் நம் சமூகம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு முன்னோடியாக இருந்து அதிகாரத்துடன் உரையாடி தீர்வை கண்டுள்ளார் என்பது வியப்பை அளிக்கிறது. பிரிட்டிஷ்  இந்தியாவின் மத்தியச் சட்டமன்றத்தில் (Central Legislative Assembly) மார்ச் மாதம் 1942 ஆம் ஆண்டு பேராசிரியர் என்.சிவராஜ் அவர்கள் அரசு துறை பணியிடங்களில் பட்டியல் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டி தீர்மானம் கொண்டுவந்தார். அதனை தொடர்ந்து 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் பேராசிரியர் என்.சிவராஜ் அவர்களின் கோரிக்கையை ஏற்று பட்டியல் மக்களுக்கு அகில இந்திய குடிமைப் பணிகள் மற்றும் மத்திய அரசு பணிகளில் 12யில் 1 மடங்கு அல்லது 8.33% ஒதுக்கீடு வழங்கியது. சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் அரசு துறைகளில் அகில இந்திய அளவில்  இடஒதுக்கீடு பெற்றது இதுவே முதல் முறை ஆகும். அகில இந்திய பட்டியலின கூட்டமைப்பின் (All India Scheduled caste federation) மாபெரும் வெற்றியாகவும்  இந்நிகழ்வு அமைந்...

உள் ஒதுக்கீடு அரசியல்

Image
ரவிக்குமாரின் முகநூல் பக்கத்திலிருந்து  2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி  தமிழகத்தில் பட்டியல் மக்கள் 1 கோடியே 18 லட்சத்து 57 ஆயிரத்து 504 பேர். அதில் அருந்ததியர்களின் 18 லட்சத்து 61 ஆயிரத்து 457. அதாவது 2001 மக்கள் தொகை கணக்குப்படி 3 சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சமூகத்துக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வழங்க முடிவு செய்தது 2006 - 2011 வரையிலான மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. அதன்படி 2009ஆம் ஆண்டு முதல் பட்டியல் சாதிகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. பிறகு அருந்ததியர் உள் இடஒதுக்கீடு நடவடிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 2009இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2011 ஆண்டு  மக்கள் தொகை கணக்கீட்டின் படி தமிழ்நாட்டு மொத்த மக்கள் தொகை  7,21,47,030. இவர்களில் பறையர் மற்றும் அவரது கிளைக்குழுவினர்  எண்ணிக்கை  91,73,139. தேவேந்திரர்கள் மற்றும் அவரது கிளைக்குழுவினர் எண்ணிக்கை 24,65,096. அருந்ததியர் மற்றும் அவரது கிளைக்குழுவினர்...

திமுகவின் சமூக நீதி என்பது அநீதியே

Image
  திமுக கடலூர் மாவட்டத்தில் கட்சியின்  அடையாளமாக தொடக்க காலகட்டத்தில் இருந்தே M.R. கிருஷ்ணமூர்த்தி என்ற வன்னியர் சமுகத்தவரை  முன்னிறுத்துகிறது. அவரின் இறப்புக்கு பிறகு அவரது மகன் M.R.K பன்னீர் செல்வத்தை முன்நிறுத்துகிறது. கடலூர் மாவட்டத்தில் 33-35% (இந்த புள்ளி விவரம் தேர்தல் நேரத்தில்  பத்திரிகைகள் தருவது உண்மையான புள்ளிவிவரம் சற்று கூடுதலாக இருக்கும்) மக்கள்தொகை கொண்ட பறையர் சமூகத்துக்கு எந்த உரிய அங்கீகாரமும் இதுவரை தந்ததில்லை. கடலூர் மாவட்டத்தில் திமுக கட்சியை வளர்த்ததில் பட்டியல் சமூகத்துக்கு முக்கிய பங்குண்டு (இது தமிழக அளவிலும் பொருந்தும்). பட்டியல் சமூகத்தை சார்ந்த முடிகண்டநல்லூர் சி.கோவிந்தராஜ் திமுகவை மக்களிடம் கிராமம் கிராமமாக சென்று வளர்த்தார். இதன் பயனாக  பட்டியல் சமூக மக்களின் மத்தியில் பெரும் ஆதரவை திமுக பெற்றது. காங்கிரஸ் கட்சியில் L. இளையப்பெருமாள் அவர்களின் சொந்த ஊர் காட்டுமன்னார்கோவில் என்பதால் அவரை எதிர்க்க ஒரு பட்டியல் சமூகத்தவர் தேவை என்பதாலேயே திமுக சி.கோவிந்தராஜை முன்நிலைப்படுத்தியது. காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி தனி தொகுதியாக 1967...

சித்தர் மரபு பௌத்த மரபே

Image
மீளும் பௌத்தம்-சித்தர் மரபு பௌத்த மரபே என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை பொறையார் (பிறையாரு) நகரிலே அமைந்தது. ஓய்வு நேரத்தை அமைதியாக கழிக்கும் இடமாக  பொறையார் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பாப்பையா மடம் எனக்கு அமைந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்து செல்லும் தொலைவில் பௌத்த அடையாளங்களை தாங்கி பாப்பையா மடம் இருக்கிறது.  பொறையாரின் புறநகர் பகுதியான கோட்டைமேடு என்ற பகுதியில் ஶ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி மடம் அமைந்துள்ளது. மடத்தின் வாசலின் இருபக்க  சுவரிலும் புத்தம் சரணம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சித்தர் மடத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள தொடர்பை நமக்கு துவக்கத்திலேயே காட்டுகிறது. பாப்பையா மடம் இலங்கை தாய்லாந்து மற்றும் திபெத் போன்ற நாடுகளின்  பௌத்த விகார் அமைப்புடன் ஒத்து  மடத்தின் கட்டிடக்கலை அமைந்துள்ளது. இலங்கை புத்த அமைப்பின் உதவியால் மாமல்லபுரத்தில் செய்து  கொண்டுவரப்பட்ட புத்தரின் சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து சுமார் (5+12) 17 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சீவர ஆடையில் நின்ற நிலையில் புத்தரின் சிலையில் ...

பஞ்சமி நிலம் பாதுகாப்புக்கான தனிச் சட்டம் வேண்டும்

Image
இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த ஜேம்ஸ் திரமென்ஹீர் என்பவர் தலித் மக்களுக்கு நிலம் வழங்கிடக்கோரி பிரிட்டன் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதனடிப்படையில், பிரிட்டிஸ் அரசாங்கம் தலித் மக்களுக்கு நிலம் வழங்குவதற்காக அரசாணை எண் : 1010 (ம) 1010A Revenue நாள் : 30.09.1892 மற்றும் அரசாணை எண் : 68 Education நாள் : 01.02.1893 ஆகிய இரண்டு அரசாணைகளை பிறப்பித்து, அதன்மூலம் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு சுமார் 12 இலட்சத்து 61 ஆயிரத்து 13 ஏக்கர் நிலங்களை வழங்கியது. இந்நிலங்களே பஞ்சமி நிலங்கள் அல்லது D.C land என்று அழைக்கப்படுகின்றன. நில நிர்வாக ஆணையர் அலுவலக கடிதம் ந.க.எப்1/20616/2006-ல் 26.07.2006-ம் நாளிட்ட கடிதத்தில் தமிழகத்தில் மொத்தம் 1,26,113.06 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் மட்டுமே தமிழகத்தில் உள்ளது எனவும், சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் இல்லை எனவும் தமிழக அரசின் நில நிர்வாகத்துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நில நிர்வாகத்துறை வெ...

நன்றி மறந்த திமுக

Image
நன்றி மறந்த திமுக-குடிசை கொளுத்தியவர்கள் தியாகிகளா? தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.  1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் வன்னியர் சங்கம் தொடர் சாலைமறியல் நடத்துவதாக அறிவித்த பின்பு, அதற்கு முதல் நாள் செப்டம்பர் 16-ல் சென்னையில் திமுகவின் அண்ணா அறிவாலயம் கட்டடத்தை திறக்கும் முப்பெரும் விழா மாநாட்டை நடத்துவதாக கருணாநிதி அறிவித்தார்.  திமுகவின் மாநாடு முடித்து செல்கிறவர்கள் தமிழ் நாட்டின் வடமாவட்டங்களை கடக்கும் நேரமும், வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் தொடங்கிய செப்டம்பர் 17 அதிகாலை நேரமும் ஒன்றாக இருந்ததால், சாலைமறியலில் ஈடுபட்டவர்களுக்கும் திமுக கட்சியினருக்கு வாக்குவாதம் நடந்து கலவரமாக மாறியது. வன்னியர்களுக்கும் திமுகவினருக்கும் விழுப்புரம் மாவட்டம் சுந்தரிபாளையம் என்ற கிராமம் அருகே பிரச்சினை ஏற்படவே திமுகவினர் தப்பிக்க அருகில் இருக்கும் சுந்தரிப்பாளையம் பறையர் குடிய...

தலித் மக்களின் பிரச்சனையை பேசும் வானதி சீனிவாசன்

Image
  நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் பஞ்சமி நிலம்  தொடர்பாக கர்நாடகம், மகாராஷ்டிரா போல தலித் மக்களுக்கு நிலம் கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு முன் வரவேண்டும் என்று BJP யின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியுள்ளார். மக்கள் நீதிக் கட்சியின் ஒருங்கிணைப்பில் பஞ்சமி நில மீட்பிற்காக நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி ப.அம்பேத்வெங்கடேஷ் அவர்களின் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 16.8.2021 தினத்தில் நடத்தப்பட்டது என்பதை இந்த தருணத்தில் நாம் வானதி சீனிவாசன் பேச்சுடன் இணைத்து பார்க்க வேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பாக தொடர்ந்து தலித் அமைப்புகள் போராடி அரசுக்கு அழுத்தம் தருகின்றனர். ஆனால் அரசுக்கு போதுமான அழுத்தம் ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் கடந்துபோகவே விரும்புகிறது. அதேசமயம் நாம் ஒருமித்த குரலில் எந்த விதமான போராட்டமும் அரசுக்கு எதிராக செய்யும் சூழலை வளர்த்துக் கொள்ளவும்யில்லை. பஞ்சமி நிலம் தொடர்பான போராட்டத்தை தமிழகத்தில் தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சில ப...