Posts

Showing posts from December, 2021

சாதி (இந்து) கட்சி- திமுக

Image
  சாதி ( இந்து) கட்சி- திமுக திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுகவை  தலித்கள் எப்போது ஆக்கபூர்வமான கேள்வி எழுப்பினாலும் இரண்டு விதமாக பதிலளிக்கிறார்கள். முதல் அணுகுமுறை கேள்வி எழுப்புகிறவர்களை சாதி வெறியர் என்றும் உங்களுக்குள்  சாதிய முரண்கள்  இல்லாமல் இருக்கிறதா? நீங்கள் எல்லோருக்கும் கேட்பீர்களா? இப்படி உட்சாதி முரணை கிளப்பி  கேள்விக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது. இரண்டாவது அணுகுமுறை பார்பனர்களின் கைக்கூலி  "இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்  திமுக செய்த நன்றியை மறந்தவர்கள்" என்று கூறி பிஜேபிக்கு ஆள்சேர்க்கும் வேலையில் ஈடுபடுவது. இந்த இரண்டு அணுகுமுறையிலும் உரிய பதிலில்லை என்பதை தாண்டி, ஆனால் செய்ததுபோல பில்டப் மட்டுமே இருக்கும். திமுக தலித் தரப்பின் கேள்விக்கு முன்பெல்லாம் கட்சியில் இருக்கும் ஒரு தலித்தை வைத்து அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் தற்போது சில மாற்றத்தை உருவாக்கிய அந்த அறிக்கை பணியைவும் திமுக செய்வதில்லை. அதற்கு மாறாக தலித் கட்சிகளை பயன்படுத்துகிறது. தலித் தரப்பிலிருந்து  திமுக மீது பல கோணங்களில் கேள்வி எழுப்பினாலும் சாரம்சம் ஒன்றுதா...

அறநிலையதுறையில் சாதியம்

Image
  அறநிலையதுறையில் சாதியம் திமுக அரசு பருவமழை காலத்தில் வெள்ள  நிவாரணப் பணிகளில் காட்டும் ஆர்வத்தை விட மற்ற அதிகாரமிக்க  பல பொறுப்புகளை சத்தமில்லாமல் நியமித்து வருகிறது. திமுக அரசு இப்படியான அதிகாரமுடைய பொறுப்புகளை நியமிப்பதன்  மூலம் சாதியமைப்பை கட்டுடையாமல்  பாதுகாக்கும் பணியை  மேற்கொள்கிறது. குறிப்பாக அரசு  வழக்கறிஞர்கள் நியமனம் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். திமுக அரசு இரண்டு நிலைப்பாட்டை மையமாக வைத்துகொண்டு சமூக நீதி என்ற பெயரில் அரசியல் செய்கிறது. ஒன்று ஏற்கனவே இருக்கும் சாதியமைப்பை வன்கொடுமை மற்றும் படுகொலை நடைபெறும் போது அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து சூத்திர விசுவாசத்தை திமுக காட்டுகிறது. மற்றொன்று திமுக அரசு முதலமைச்சருக்கு  கொடுக்கும்  முக்கியத்துவத்துக்கு அடுத்தபடியாக இந்து அறநிலையத்துறை மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம்  மக்கள் மத்தியில் கட்டமைத்து வருகிறது இதிலும் கவனமாக ஸ்டாலின் அரசு மதப்பற்றை கடந்த சூத்...