தலித் மக்களின் ஆக்கபூர்வமான போராட்டங்களை கையில் எடுத்து சாதித்துகாட்டிய பஞ்சமி நில மீட்பு போராளி அய்யா நீலதுண்டு கூத்தாநல்லூர் K. கிருஷ்ணமூர்த்தி அவர்களை நண்பர் முத்து பிரதிபன் சாக்கியா மற்றும் டேவிட்டுடன் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் எனக்கு ஏற்படுத்தியது. 1938யில் பிறந்து மருத்துவ உதவியாளராக தான் பணியாற்றிய அரசு பணியை துறந்து தன் இளமைக்காலம் முதல் மக்கள் பணியில் தற்போது வரை ஈடுபட்டு வரும் அய்யா அவர்கள் தன்னுடைய போராட்ட அனுபவங்களை 84 வயதிலும் உற்சாகமாக சீர்காழி பனங்காட்டுத்தெருவில் இருக்கும் வீட்டில் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். 1967-70 காலகட்டத்தில் கும்பகோணம் அரசு கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து அம்பேத்கர் மன்றம் என்ற பெயரில் மாணவர் அமைப்பு தொடங்கி டாக்டர் அம்பேத்கர் படத்தை பல இடர்பாடுகளின் மத்தியில் கல்லுரியில் இடம்பெற செய்தார். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தன் சொந்த கிராமத்து குழந்தைகளுக்கு இரவு பள்ளியை நடத்தினார். கல்லூரியில் நடத்தி வந்த அம்பேத்கர் மன்றத்தை இளைஞர்களுடன் இணைந்து விரிவுபடுத்த திருவாலி, கோட்டகம், புளி...