சட்டங்களை மீறும் அரசுகள்
பட்டியல் மக்கள் 1950ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்துக்களாக கருதப்படவில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 341சரத்தின் படி SC பட்டியலை வரையறுக்க மாநிலமாக இருந்தால் ஆளுநருக்கும், யூனியன் பிரதேசமாக இருந்தால் துணை நிலை ஆளுநருக்கும் அதிகாரம் வழங்கியது.
சரத்து 341 ன் படி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக பட்டியல் தயார் செய்து நாடாளுமன்றத்தில் விவாதித்து குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்தார். இந்த சட்டத்தில் SC பட்டியலில் இருக்க ஒருவர் அதற்கான தகுதியாக அவர் இந்து மதத்தை ஒழுக அல்லது ஓம்ப வேண்டும் என்று வரையறுத்தது.
இந்து மதத்தை பின்பற்ற வேண்டும் என்கிற ஒரு வார்த்தை இடம்பெற்றதால் மதம் மாறிய அனைத்து தலித்தகளும் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டிய சூழலை இச்சட்டம் உருவாகக்கியது.
பாபாசாகிப் அம்பேத்கார் 1956ஆம் ஆண்டு மதம் மாற்றம் அறிவித்து புத்த மதம் மாறியபோது SC பட்டியலில் இருந்தவர்கள் இந்து மதத்தை பின்பற்றாததால் BC பட்டியலில் இடம்பெற்றனர்.
1990 மத்தியில் V.P. சிங் ஆட்சியின்போது ராம்விலாஸ் பஸ்வான் அவர்களின் அழுத்தத்தால் இந்திய அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு மதம் மாறிய புத்த மற்றும் சீக்கிய தலித்கள் SC பட்டியலில் இடம்பெற வழிவகை செயதார்.
இச்சட்ட திருத்தத்தின் மூலம் மதம் மாறிய புத்த மத தலித்தகள் இந்தியா முழுதும் பட்டியல் பிரிவில் இடம்பெற்றனர். அதனடிப்படையில் SC பட்டியலில் இருந்த 76 சாதி பட்டியல்களில் கூடுதலாக 77 பிரிவான SC CONVERTED TO BUDDHIST என்ற பிரிவை தமிழக அரசு உருவாக்கியது.
அதிமுக அரசு 2002 ஆம் ஆண்டில் கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டுவந்தபோது, இச்சட்டம் பட்டியல் பிரிவில் 77 வது பிரிவான SC CONVERTED TO BUDDHIST என்பதற்கு எதிராக இருப்பதாக கூறி இந்தபிரிவை தமிழக அரசு நீக்கியது.
இஸ்லாம் மற்றும் கிருத்துவ மதத்தினரின் கடுமையான எதிர்ப்பால் கட்டாய மத மாற்ற தடை சட்டம் திரும்ப பெறப்பட்டது. ஒரு சட்டத்தை திரும்ப பெறும்போது அது தொடர்பாக செய்த மாற்றங்களும் திரும்ப பெரும் அதான் சட்ட நடைமுறை. ஆனால் SC பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 77வது பிரிவு மட்டும் மறுபடியும் சேர்க்கவில்லை.
ஒரு சட்டத்திருத்தம் மூலம் மத்திய அரசு கொண்டுவந்த பிரிவை நீக்கவும், சேர்க்கவும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாதபோது இந்த திருத்தம் எப்படி சாத்தியம். இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது இல்லையா? அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஏன் எதிர்க்கவில்லை.
77 வது பிரிவு நீக்கத்தை எதிர்க்க வேண்டியவர்கள் இருவர் ஒன்று மதம் மாறிய பட்டியல் சமூக மக்கள், மற்றொருவர் பட்டியல் சமூக கட்சிகள்.
மதம் மாறியவர்கள் குறைவு என்பதால் அவர்கள் எதிர்க்க வாய்ப்பில்லை. ஆனால் பட்டியல் சமூக கட்சிகள் கட்டாய மத மாற்ற தடை சட்டத்துக்கு காட்டிய எதிர்ப்பை 77வது பிரிவு நீக்கத்தை கண்டுகொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
மதம் மாறிய தலித்கள் மத்தியில் சமீபகாலமாக 77 வது பிரிவை சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த கோரிக்கையை வலுசேர்க்கும் விதமாக தலித் கட்சிகளும், சமுக, சமய நல்லிணக்கம் பேசும் கட்சிகளும் சட்டமன்றத்து உள்ளேயும் வெளியேயும் அழுத்தம் தர வேண்டும். இவர்களின் நியாமான கோரிக்கையை ஏற்று மாநில அரசு 77 வது பிரிவை SC பட்டியலில் மறுபடியும் சேர்க்க வேண்டும்.
Comments
Post a Comment