Posts

Showing posts from November, 2021

24 கிராம கமிட்டி தலைவர் கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி

Image
 24 கிராம கமிட்டி தலைவர் கே.ஏ.கிருஷ்ணமூர்த்தி  மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகில் வயல்வெளி என்ற கிராமத்தில் அருணாசலம் ஜெகதாம்பாள் தம்பதியருக்கு 14 அக்டோபர் 1949 அன்று கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். சிறுவயது முதல் சமூக பிரச்சனையை துணிந்து பேசுவதிலும், ஆன்மிகத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். கிருஷ்ணமூர்த்தி தனது பள்ளிப் படிப்பை சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில்  படித்தார். பள்ளியின் விடுதியில் தங்கி படிக்கும்போது கண்காணிப்பாளரின் தவறை தட்டிகேட்டதால் கே.பி.எஸ்.மணியின் பாராட்டை பெற்றார்.  தன்னுடைய அரசியல் வாழ்க்கையை பள்ளி பருவதில்லையே தொடங்கிய கே.ஏ.கே 24 கிராம கமிட்டி தலைவர், துணை ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும்  ஆதிதிராவிடர் நல மாநிலக்குழு உறுப்பினர் என்று பல தளங்களில் பணியாற்றியுள்ளார். 1970 காலகட்டத்தில் கடுமையான சாதிய பிரச்சனைகள் பூம்புகார்  மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தலித் மக்களுக்கு நடந்தது. குறிப்பாக கே.ஏ.கே கிராமமான வயல்வெளியில் செத்த மாட்டை தூக்க மாட்டோம் என்கிற இழி தொழில் மறுப்பு சம்பவம் இவரை ...

முதல் தொழிற்சங்க போராளி

Image
  கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பகுதியிலிருந்து  வியாபார நிமித்தமாக சென்னை புழலில் தன்ராஜ் குடும்பம் புலம்பெயர்ந்து. புழல் கிராமத்தில் தன்ராஜ் 10 ஆகஸ்டு 1923 ஆண்டு பிறந்தார். காலப்போக்கில் புழல் பகுதியிலிருந்து ஆமகுளச்சேரி என்ற பகுதிக்கு தன்ராஜ் குடும்பம் குடிபெயர்ந்தது. பள்ளி படிப்பை சேலம் மற்றும் நாமக்கல்லில் அருட்தந்தை டேவிட் துரோவர் உதவிடன் படித்தார். 1943 யில் ராயல் ஏர்போசில் பணியில் சேர்ந்து பின்னாளில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்டார். உலகப்போர் முடிந்ததும் 1946 யில் அந்த பணியில் இருந்து விலகி தலித் மக்கள் தொடர்பான இதழ்களை நடத்தி வந்தார். 1948 ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வேயில் பெரம்பூர் கேரேஜ் பணிமனையில் மெஷினிஸ்ட்டாக  பணியில் சேர்ந்தார். ரயில்வே பணியாளர்கள் இடையே சாதிய பாகுபாடுகள் இருப்பதை பார்த்து அதற்கான தீர்வுக்காக போராட தொடங்கினார். ரயில்வே கேண்டீனில் தலித் தொழிலாளர்களுக்கென தனியாக குடிநீர் பானை, சாப்பிடும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் தலித் பணியாளர்களுக்கு மட்டும் அதிக பணிச்சுமையை ரயில்வே நிர்வாகம் வழங்கியது. இதுபோன்ற பிரச்சனைகளை SRES (South...