முதல் தொழிற்சங்க போராளி
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பகுதியிலிருந்து வியாபார நிமித்தமாக சென்னை புழலில் தன்ராஜ் குடும்பம் புலம்பெயர்ந்து. புழல் கிராமத்தில் தன்ராஜ் 10 ஆகஸ்டு 1923 ஆண்டு பிறந்தார். காலப்போக்கில் புழல் பகுதியிலிருந்து ஆமகுளச்சேரி என்ற பகுதிக்கு தன்ராஜ் குடும்பம் குடிபெயர்ந்தது.
பள்ளி படிப்பை சேலம் மற்றும் நாமக்கல்லில் அருட்தந்தை டேவிட் துரோவர் உதவிடன் படித்தார். 1943 யில் ராயல் ஏர்போசில் பணியில் சேர்ந்து பின்னாளில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்டார். உலகப்போர் முடிந்ததும் 1946 யில் அந்த பணியில் இருந்து விலகி தலித் மக்கள் தொடர்பான இதழ்களை நடத்தி வந்தார்.
1948 ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வேயில் பெரம்பூர் கேரேஜ் பணிமனையில் மெஷினிஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். ரயில்வே பணியாளர்கள் இடையே சாதிய பாகுபாடுகள் இருப்பதை பார்த்து அதற்கான தீர்வுக்காக போராட தொடங்கினார்.
ரயில்வே கேண்டீனில் தலித் தொழிலாளர்களுக்கென தனியாக குடிநீர் பானை, சாப்பிடும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் தலித் பணியாளர்களுக்கு மட்டும் அதிக பணிச்சுமையை ரயில்வே நிர்வாகம் வழங்கியது. இதுபோன்ற பிரச்சனைகளை SRES (Southern Railway Employees Sangh) மற்றும் SRLU (Southern Railway Labour Union) போன்ற தொழிற்சங்கத்துடன் இணைந்து தீர்க்க பாடுபட்டார்.
இரண்டு சங்கங்களிலும் தலித் மக்களின் பிரச்சினைகளை முழுமையாக பேசமுடியாமல் போகவே தனியாக SC/ST தொழிலாளர்களுக்காக சங்கம் தொடங்க முடிவெடுத்தார். 27 நவம்பர் 1960 ல் All India SC/ST Railway Employess Association என்ற சங்கத்தை நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். இதுவே தென்னிந்தியாவின் முதல் SC/ST ரயில்வே தொழிற்சங்கம் என்பது குறிப்பிடதக்கது.
தொழிற்சங்கத்தின் காப்பாளராக L. இளையப்பெருமாள் MP, சாதுராம் MP, கங்காதேவி MP, மற்றும் பி.எஸ்.மூர்த்தி ஆகியோர் இருந்தனர். பெடரேஷன் (AISCF) அமைப்பின் தேசிய தலைவர் பேராசிரியர் N. சிவராஜ் உடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றினார். தான் உருவாக்கிய All India SC/ST Railway Employess Association என்ற தொழிற்சங்கத்தை இந்திய குடியசு கட்சியில் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வைத்தார்.
SC /ST தொழிற்சங்கத்தின் முதல் மாநாட்டை 1963 மே 29,30 தேதிகளில் சென்னை பெரம்பூரில் நடத்தினார். இந்த மாநாட்டிற்கு அப்போதைய பிரதமர் நேரு வாழ்த்து கடிதம் அனுப்பினார். இதன் மூலம் இச்சங்கத்தின் அரசியல் செல்வாக்கை நம்மால் உணர முடிகிறது. 1969 ஆண்டு SC /ST நலவாழ்வு மாநாடு மார்ச் 29, 30 தேதிகளில் இச்சங்கம் நடத்தியது. இந்த மநாடுகளின் மூலம் தலித் தொழிலாளர்களின் பிரச்சனைகளை ஓரளவு தீர்வு கண்டது.
SC /ST ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பிரச்சனைகளை மட்டும் பேசாமல் வெண்மணி படுகொலை, டில்லியில் தலித் மாணவி பிரேமலதா மர்ம மரணம், உத்தரபிரதேசம் பாண்டா நகரில் தலித் பெண்கள் கற்பழிப்பு , விழுப்புரம் படுகொலை போன்ற தலித் மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு சங்கம் போராடி தங்களின் சமூக உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.
ஆமகுளச்சேரி என்ற தான் வாழ்ந்த பகுதியை கோபாலபுரம் என்று பெயரமாற்றம் செய்தார். அக்கிராமத்தில் கிராம சீர்திருத்த சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அங்கு இயங்கி வந்த திண்ணை பள்ளியை அரசு பள்ளியாக மாற்றினார். கொளத்தூர் குமரன் நகர் பஸ் நிலையம் அருகில் இருந்த செல்லியம்மன் கோவில் நிலத்தை வை.பாலசுந்தர் உடன் இணைந்து போராடி அங்கு வீடற்ற தலித் மக்களுக்கு பெற்று தந்தார். இதனால் செல்லியம்மன் கோவில் குடியிருப்பில் தன்ராஜ் பெயரில் தெரு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
1960 யில் இந்தியாவில் மக்களால் முதல் முறையாக புழலில் அமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இரட்டைமலை சினிவாசனார் நினைவு மன்றத்துடன் இணைந்து சிலை அமைத்தார். இச்சிலையை பேராசிரியர் N. சிவராஜ் திறந்து வைத்து சிறப்பு செய்தார். இதுபோன்ற பல சமூக பணிகளை செய்த சீமான் தன்ராஜ் 12 நவம்பர் 1985 அதாவது இன்றைய தினத்தில் பரிநிப்பாணம் அடைந்தார். இந்த நாளில் சீமான் தன்ராஜ் அவர்களின் பணியை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
நன்றி : ராஜன் தன்ராஜ்
Comments
Post a Comment