முற்போக்கு எனும் பிற்போக்கு
முற்போக்கு எனும் பிற்போக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கும் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளார். இல்லம் தேடி கல்வி திட்டம் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டி இது RSS யின் திட்டம் என்றும் விமர்சனம் எழுந்து வரும் சூழலில் சமீப கால நிகழ்வுகளுடன் ஒப்பீட்டு பார்ப்பது மிகவும் அவசியம். கட்டாய கல்வி திட்டம் கொண்டுவந்தபோது இத்திட்டதால் பள்ளியில் சேரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடும் என்றும் மேலும் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்று காங்கிரசு அரசு கூறியது. ஆனால் தற்போது இரண்டும் குறையவில்லை அதற்கு முக்கிய காரணம் தரமான கல்வியை இத்திட்டம் உறுதிப்படுத்தவில்லை. இத்திட்டத்தை முடமாக்கியதில் ஆசிரியர் பங்கு அளப்பரியது. ஒரு வகுப்பை கற்றல் சார்ந்து வழிநடத்தாமல் இருப்பதில் நம் அரசு ஆசிரியர்களுக்கு நிகர் யாருமில்லை. அதேபோன்று திறமையான ஆசிரியர்களை பயன்படுத்துவதில் அரசுக்கு இருக்கும் தயக்கமே எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும். மாணவர்களி...