காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-6)



மாலை 3 மணி அளவில் காவல்துறை அதிகாரிகள் சிலையை உடைத்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றதாக இரவு 7 மணிக்கு எங்களுக்கு தகவல் தெரிந்தது. இரவோடு இரவாக அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்தோம். அதன் முதல் வேலையாக தூண்டறிக்கை போஸ்டர் தயார் செய்வதற்கு  இரவு 11 மணிக்கு காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள அன்பு அச்சகம் சென்றோம்.


காரணை, மானாமதி மற்றும் ஏழு கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கூடி பஞ்சமி நில உரிமை பாதுகாப்பு குழு என்று அமைத்திருந்தனர்.


அந்தக் குழு சார்பில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதில் "எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நாங்கள் அமைத்த பாபாசாகிப் அம்பேத்கர் சிலையை உடைக்கத் தூண்டிய குற்றவாளி பெருமாள்சாமி ஐஜியையும் உடைத்த போலிஷ் ரவுடிகளையும் உடனே கைது செய் " என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.


இதற்கிடையில் அக்டோபர் மாதம் 6ந் தேதி இரவு பஞ்சமி நில உரிமையாளரான தீபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப் படுகின்றனர்.


பாசறை அ. செல்வராஜ் எழுதிய "கிளர்ச்சி செய்" என்ற நூலிலிருந்து 



Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

மாநாடு