காரணை பஞ்சமி நில போராட்டம் (அக்-5)

 



பஞ்சமி நிலத்தில் சிலை வைப்பதற்கான அடிக்கல் போட குழியை தோண்ட தொடங்கினோம்.  முதன் முதலில் கடப்பாரையை வைத்து மு.க.மாயன் குழியை தோண்ட அதிலிருந்து மண்ணை நான் (பாசறை அ. செல்வராஜ் ) அள்ளிப்போட்டேன்.


சாம் நிறுவனத்தை  சேர்ந்த ஜான்தாமஷ், துரை, கண்ணியம்மாள், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத் தலைவர் கருணாகரன் அனைவரும் சிலை வைப்பதற்கான வேலையை முடிக்கும்போது 5 ம் தேதி காலை 5 மணியாயிற்று.


காலை 8 மணிக்கு பாபாசாகிப் அம்பேத்கர் சிலையை பௌத்த பெரியவர் மு.சுந்தரராசனார் அவர்கள் திறப்பதாக தூண்டறிக்கை போடப்பட்டிருந்தோம். ஆனாலும் அவர் வருவதற்கு வாய்ப்பில்லாத சூழலில் நானே சிலையை திறந்து வைத்தேன்.


சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த உண்மையான நில உரிமையாளர்களான

செடியூல்டு வகுப்பு மக்கள் 1000 கணக்கில் கலந்துகொண்டனர். 11 மணிக்கு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வீடு திரும்பினர்.


பாசறை அ. செல்வராஜ் எழுதிய "கிளர்ச்சி செய்" என்ற நூலிலிருந்து 



Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

மாநாடு