காரணை பஞ்சமி நில போராட்டம் தொடக்கம் (அக்-4)
1933 ஆம் ஆண்டு ட்ரெமென் ஹெரே அரசுக்கு பரிந்துரை செய்து சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மாமல்லபுரம் அருகே காரணை கிராமத்திற்கு ஒட்டியுள்ள கல்லமாநகர், மனமை, குழப்பந்தாதண்டலம், வளவந்தாங்கள், மானாமதி, பங்காருபேட்டை ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த செடியூல்டு வகுப்பு கூலி விவசாயிகளை திரட்டி காலணா கூலி கொடுத்து காடுகளை திருத்தி, இவ்வாறு கழனியாக்க பட்ட நிலங்களை ஆளுக்கு சுமார் 1 ஏக்கர் அளவில் பிரிட்டிஷ் அரசு பிரித்து கொடுத்தது. சர்வே எண் : 91 முதல் 207 வரை உள்ள காரணை புஞ்சை தரிசு நிலம் சுமார் 633 ஏக்கர்.(செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆணை எண்: 5560 தேதி:19-11-1933)
செங்கல்பட்டு மாவட்டம் (தற்போது
காஞ்சீவரம் மாவட்டம்) காரணை கிராமத்தில் 633 ஏக்கர் பஞ்சமி நிலம் இருக்கிறது. ஆனால் அந்த நிலங்கள் ஆதிதிராவிடர்களிடம் இல்லை.
1994 அக்டோபார் 4 ஆம் தேதி காரணையில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கின்ற போராட்டத்தின் முதல் அடியாக செடியூல்டு வகுப்பு மக்களுக்கு சட்டப்படி சொந்தமான பஞ்சமி நிலத்தில் பாபாசாகிப் அம்பேத்கர் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
பாசறை அ. செல்வராஜ் எழுதிய "கிளர்ச்சி செய்" என்ற நூலிலிருந்து
Comments
Post a Comment