மீளும் பௌத்தம்-சித்தர் மரபு பௌத்த மரபே என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை பொறையார் (பிறையாரு) நகரிலே அமைந்தது. ஓய்வு நேரத்தை அமைதியாக கழிக்கும் இடமாக பொறையார் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பாப்பையா மடம் எனக்கு அமைந்தது. நாகப்பட்டினம் மாவட்டம், பொறையார் புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்து செல்லும் தொலைவில் பௌத்த அடையாளங்களை தாங்கி பாப்பையா மடம் இருக்கிறது. பொறையாரின் புறநகர் பகுதியான கோட்டைமேடு என்ற பகுதியில் ஶ்ரீ பாப்பையா சித்தர் ஜீவ சமாதி மடம் அமைந்துள்ளது. மடத்தின் வாசலின் இருபக்க சுவரிலும் புத்தம் சரணம் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. சித்தர் மடத்துக்கும் பௌத்ததுக்கும் உள்ள தொடர்பை நமக்கு துவக்கத்திலேயே காட்டுகிறது. பாப்பையா மடம் இலங்கை தாய்லாந்து மற்றும் திபெத் போன்ற நாடுகளின் பௌத்த விகார் அமைப்புடன் ஒத்து மடத்தின் கட்டிடக்கலை அமைந்துள்ளது. இலங்கை புத்த அமைப்பின் உதவியால் மாமல்லபுரத்தில் செய்து கொண்டுவரப்பட்ட புத்தரின் சிலையின் உயரம் பீடத்துடன் சேர்த்து சுமார் (5+12) 17 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சீவர ஆடையில் நின்ற நிலையில் புத்தரின் சிலையில் ...
அறநிலையதுறையில் சாதியம் திமுக அரசு பருவமழை காலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் காட்டும் ஆர்வத்தை விட மற்ற அதிகாரமிக்க பல பொறுப்புகளை சத்தமில்லாமல் நியமித்து வருகிறது. திமுக அரசு இப்படியான அதிகாரமுடைய பொறுப்புகளை நியமிப்பதன் மூலம் சாதியமைப்பை கட்டுடையாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறது. குறிப்பாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். திமுக அரசு இரண்டு நிலைப்பாட்டை மையமாக வைத்துகொண்டு சமூக நீதி என்ற பெயரில் அரசியல் செய்கிறது. ஒன்று ஏற்கனவே இருக்கும் சாதியமைப்பை வன்கொடுமை மற்றும் படுகொலை நடைபெறும் போது அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து சூத்திர விசுவாசத்தை திமுக காட்டுகிறது. மற்றொன்று திமுக அரசு முதலமைச்சருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு அடுத்தபடியாக இந்து அறநிலையத்துறை மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் கட்டமைத்து வருகிறது இதிலும் கவனமாக ஸ்டாலின் அரசு மதப்பற்றை கடந்த சூத்...
வாத்தியார் வேலு 1916 -1982 அருள் முத்துக்குமரன் தஞ்சை பகுதியை பற்றி பேசும்போதெல்லாம் கூலி உயர்வு சார்ந்த பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் அந்த பகுதியில் நடந்த சாதி ரீதியான வன்கொடுமைகள் குறித்து போதிய கவனம் செலுத்துவதில்லை. அதனாலேயே அங்கு செயல்பட்ட தலித் ஆளுமைகள் பற்றிய கவனம் பெறாமலே போகிறார்கள். அந்த வகையில் மயிலாடுதுறை பகுதியில் ஆசிரியர் வேலு என்பவர் பட்டியல் சமுக மக்களின் உரிமைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது யாரும் அறியாமல் இருந்தது. சுதந்திரத்துக்கு முன்பே திருவள்ளுவர் பெயரில் மாணவர் விடுதியை நடத்தி மயிலாடுதுறை வட்டார மக்களுக்கு கல்வி போதித்து வந்தார். அதன் பின்பு பெடரேஷன் அமைப்பில் தொண்டு வீராசாமி, நடுதிட்டு கூத்தரசன் கே.பி.எஸ்.மணி போன்றவர்களுடன் இணைந்து இழி தொழில் ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மக்கள் பணியில் இருந்ததால் தான் பணியாற்றிய ஆசிரியர் பணியை துறந்து சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற தேர்தலில் மயி...
Comments
Post a Comment