திசை திருப்பும் திட்டங்கள்


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் தலித் இளைஞர்கள்களை திசைதிருப்பும் திட்டம்.


கடந்த கால வரலாறுகளை பார்க்கும்போது  தலித் மக்கள் போராட்டங்கள் மூலம் விழிப்புணர்வு அடைந்து சுய மரியாதையுடன் பேசி, செயல்பட்டு வரும்போது அதற்கு நேர் எதிரான ஒரு நடவடிக்கை எடுத்து தலித் மக்களை திசைதிருப்பி நடந்த ஆக்கப்பூர்வமான செயல்களை மடைமாற்றுவது அரசின் நிலைப்பாடக இதுவரை இருந்துள்ளது.


உதாரணமாக விடுதலை சிறுத்தைகளின் தொடக்க கால போராட்டங்களில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைதி செய்துகொண்டே அன்றைய முதல்வர் கருணாநிதி 1998 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருதை உருவாக்கி முதன் முதலாக அய்யா L. இளையப்பெருமாள் அவர்களுக்கு அறிவித்தது. ஆனால் விருதுபெற்ற அய்யா L.இளையப்பெருமாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசின் உள்நோக்கத்தை விமர்சித்து எங்கள் மக்கள் மீது ஏவும் அடக்குமுறையை உடனே அரசு நிறுத்த வேண்டும் என்று கூறினார்.


இதேபோன்று மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் வெள்ளை அறிக்கை பெற்று அரசு துறையில் பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்ப கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து அரசுக்கு அழுத்தம் தந்த தருணத்தில் அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு தந்து ஒட்டுமொத்த போராட்டத்தையும் திசைதிருப்பி பறையர், தேவேந்திர குலவேலாளர், அருந்ததியர் என்று மாற்றி பின்னடைவு காலி பணியிடங்களை ஒட்டுமொத்தமாக நிரப்பாமல்  அன்றைய முதல்வர் கருணாநிதி காலிசெய்தார்.


தற்போது தலித் மக்களிடம் கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக பௌத்தம் பற்றிய விழிப்பு ஏற்பட்டு சில விமர்சனமும் விவாதங்களும், தலித் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது

இதை உணர்ந்து திமுக அரசு தற்போது தலித்தகளை மடைமாற்றும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டத்தை கொண்டுவந்திருக்கிறது.


தமிழக கிராம கோவில்களில் கணிசமான இடங்களில் தலித் மக்கள் பூசாரியாக இருக்கிறார்கள். குறிப்பாக சாதிய இருக்கம் அதிகம் கொண்ட உசிலம்பட்டி போன்ற பகுதிகளில்  கள்ளர்களுக்கு குல தெய்வமாக இருக்கும் கோவில்களில் தலித் மக்களில் பறையர் சமூகத்தவர்கள் பூசாரியாக இருக்கிறார்கள். திமுக அரசுதான் தலித் பூசாரிகளை உருவாக்கியது என்பது வரலாற்று இருட்டப்பு.


இன்றைக்கு தலித் இளைஞர்கள் மத்தியில் எழுந்து வரும் பௌத்த அலையை மழுங்கடித்து மறுபடியும் பழைய நிலைக்கு தள்ளுவதே இந்த திமுக அரசின் நோக்கம். இதைத்தான் திமுக சனாதன ஒழிப்பு என்று மார்தட்டி கொள்கிறது. இதையும் நம் தலைவர்கள் வரவேற்கிறார்கள். இதைபற்றிய நீண்ட விவாதம் நம்மிடம் தேவைப்படுகிறது.


Comments