அறநிலையதுறையில் சாதியம் திமுக அரசு பருவமழை காலத்தில் வெள்ள நிவாரணப் பணிகளில் காட்டும் ஆர்வத்தை விட மற்ற அதிகாரமிக்க பல பொறுப்புகளை சத்தமில்லாமல் நியமித்து வருகிறது. திமுக அரசு இப்படியான அதிகாரமுடைய பொறுப்புகளை நியமிப்பதன் மூலம் சாதியமைப்பை கட்டுடையாமல் பாதுகாக்கும் பணியை மேற்கொள்கிறது. குறிப்பாக அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மற்றும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பது போன்றவற்றை குறிப்பிடலாம். திமுக அரசு இரண்டு நிலைப்பாட்டை மையமாக வைத்துகொண்டு சமூக நீதி என்ற பெயரில் அரசியல் செய்கிறது. ஒன்று ஏற்கனவே இருக்கும் சாதியமைப்பை வன்கொடுமை மற்றும் படுகொலை நடைபெறும் போது அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்து சூத்திர விசுவாசத்தை திமுக காட்டுகிறது. மற்றொன்று திமுக அரசு முதலமைச்சருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு அடுத்தபடியாக இந்து அறநிலையத்துறை மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் கட்டமைத்து வருகிறது இதிலும் கவனமாக ஸ்டாலின் அரசு மதப்பற்றை கடந்த சூத்...
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சைப் பகுதியிலிருந்து வியாபார நிமித்தமாக சென்னை புழலில் தன்ராஜ் குடும்பம் புலம்பெயர்ந்து. புழல் கிராமத்தில் தன்ராஜ் 10 ஆகஸ்டு 1923 ஆண்டு பிறந்தார். காலப்போக்கில் புழல் பகுதியிலிருந்து ஆமகுளச்சேரி என்ற பகுதிக்கு தன்ராஜ் குடும்பம் குடிபெயர்ந்தது. பள்ளி படிப்பை சேலம் மற்றும் நாமக்கல்லில் அருட்தந்தை டேவிட் துரோவர் உதவிடன் படித்தார். 1943 யில் ராயல் ஏர்போசில் பணியில் சேர்ந்து பின்னாளில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்டார். உலகப்போர் முடிந்ததும் 1946 யில் அந்த பணியில் இருந்து விலகி தலித் மக்கள் தொடர்பான இதழ்களை நடத்தி வந்தார். 1948 ஆம் ஆண்டு இந்தியன் ரயில்வேயில் பெரம்பூர் கேரேஜ் பணிமனையில் மெஷினிஸ்ட்டாக பணியில் சேர்ந்தார். ரயில்வே பணியாளர்கள் இடையே சாதிய பாகுபாடுகள் இருப்பதை பார்த்து அதற்கான தீர்வுக்காக போராட தொடங்கினார். ரயில்வே கேண்டீனில் தலித் தொழிலாளர்களுக்கென தனியாக குடிநீர் பானை, சாப்பிடும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் தலித் பணியாளர்களுக்கு மட்டும் அதிக பணிச்சுமையை ரயில்வே நிர்வாகம் வழங்கியது. இதுபோன்ற பிரச்சனைகளை SRES (South...
செப்டம்பர் மாத நீலம் தலையங்கம் வரலாற்று பிழை ஒய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் ஒன்றை உருவாக்கி அதன் பரிந்துரையின் பேரில் தமிழக சட்ட மன்றத்தில் 2009 ஆண்டு அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் தி.மு .க அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் மூலம் அரசு கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் அனைத்து துறை பணிகளிலும், பட்டியல் சாதிகள் அனுபவித்துவரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டினைப் பிரித்து மூன்று விழுக்காட்டினை 'அருந்ததியர் சிறப்பு உள் இட ஒதுக்கீடு' என்று அருந்ததியினருக்கு தமிழக அரசு வழங்கியது. இத்தகைய தமிழக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பட்டியல் சாதிக்குள் அருந்ததியர் ஒரு பிரிவினராகவும், அருந்ததியர் அல்லாத பிற பட்டியல் சாதிகள் ஒரு பிரிவினராகவும் பிரிக்கப்பட்டனர். பத்திரிக்கை துறையில் சூத்திரர் மற்றும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் அனைத்து ஊடகங்களும் உள் ஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக ஆதரித்து எழுதியுள்ளது. முற்போக்கு சாதி இந்துக்கள் ஆதரவு தெரிவித்து தன்னுடைய சமுக நீதியை நிலைநாட்டியுள்ளனர். அந்த வர...
Comments
Post a Comment