சாதி (இந்து) கட்சி- திமுக
சாதி (இந்து) கட்சி- திமுக
திராவிட கட்சிகளில் குறிப்பாக திமுகவை தலித்கள் எப்போது ஆக்கபூர்வமான கேள்வி எழுப்பினாலும் இரண்டு விதமாக பதிலளிக்கிறார்கள். முதல் அணுகுமுறை கேள்வி எழுப்புகிறவர்களை சாதி வெறியர் என்றும் உங்களுக்குள் சாதிய முரண்கள் இல்லாமல் இருக்கிறதா? நீங்கள் எல்லோருக்கும் கேட்பீர்களா? இப்படி உட்சாதி முரணை கிளப்பி கேள்விக்கு பதிலளிக்காமல் தப்பிப்பது.
இரண்டாவது அணுகுமுறை பார்பனர்களின் கைக்கூலி "இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் திமுக செய்த நன்றியை மறந்தவர்கள்" என்று கூறி பிஜேபிக்கு ஆள்சேர்க்கும் வேலையில் ஈடுபடுவது. இந்த இரண்டு அணுகுமுறையிலும் உரிய பதிலில்லை என்பதை தாண்டி, ஆனால் செய்ததுபோல பில்டப் மட்டுமே இருக்கும்.
திமுக தலித் தரப்பின் கேள்விக்கு முன்பெல்லாம் கட்சியில் இருக்கும் ஒரு தலித்தை வைத்து அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் தற்போது சில மாற்றத்தை உருவாக்கிய அந்த அறிக்கை பணியைவும் திமுக செய்வதில்லை. அதற்கு மாறாக தலித் கட்சிகளை பயன்படுத்துகிறது.
தலித் தரப்பிலிருந்து திமுக மீது பல கோணங்களில் கேள்வி எழுப்பினாலும் சாரம்சம் ஒன்றுதான் "திமுக சாதிஇந்து கட்சி" அதனால் சமூக நீதி கட்சி என்று சொல்லவேண்டாம் என்ற வாதத்தை தொடர்ந்து வைக்கிறார்கள்.
இதற்கு ஒரு சில உதாரணம் மட்டுமே திமுக கட்சியின் அதிகாரமிக்க பொறுப்புகள் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், ஒருமுறையாவது தலித்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? குறைந்தபட்சம் மாவட்ட செயலாளர் பொறுப்பு எத்தனை தலித்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரம் என்னவென்று திமுக சொல்ல முடியுமா ? இவற்றையெல்லாம் கருத்தில் வைத்தே தலித்கள் திமுக "சாதி இந்து கட்சி" என்கிற நிலையிலிருந்து வளர்ந்து "சாதி வெறி கட்சியாக" மாறிவிட்டது என்று விமர்சிக்கிறார்கள்.
மற்றுமொரு உதாரணமும் திமுக ஆதரவாளர்களுக்கு உதவும் என்று எண்ணுகிறேன். அண்ணாதுரை தலைமையில் திமுக தேர்தலை எப்படி சந்தித்து உள்ளது என்று பார்போம். ஆற்காடு வீராசாமி தந்தி TV க்கு அளித்த பேட்டியில் 1967 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆற்காடு தொகுதியில் நாயுடுகள் அதிகம் என்பதாலும் நான் நாயுடு என்ற காரணத்தினாலும் அண்ணாதுரை தன்னை வேட்பாளராக அறிவித்தார் என்று கூறியுள்ளார்.
1962 ஆம் ஆண்டு நடந்த சமுதாய சீர்திருத்த மாநாட்டில் தோழர் டி.இருசப்பன் பேசுகையில் பொதுவாக திமுக தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் சாதிய உணர்வுகளை ஊட்டி வாக்கு சேகரிப்பது வழக்கமாகிவிட்டது என்றும் குறிப்பாக 1957 ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாதுரை தன்னுடைய பெயருக்கு பின்னால் முதலியார் என்று சாதிபெயரை
போட்டுத்தான் வாக்கு சேகரித்தார் என்றும் இதையே கட்சியின் பிற வேட்பாளர்களும் தங்களின் சாதி பெயர்களான கவுண்டர், படையாட்சி, நாடார், நாயுடு என போட்டு பிரச்சாரம் செய்தார்கள் என்று கூறுகிறார். (தென்றல் இதழ் 14-08-62)
அண்ணாதுரை தலைமையில் நடந்த வேட்பாளர் தேர்வு சாதி அடிப்படையிலும், தேர்தல் பிரச்சாரமும் அதேபோல் நடைமுறை என்றால் இங்கே சமூக நீதி எங்குள்ளது? பிறகு ஆட்சி எப்படி இருக்கும். அண்ணாதுரை தொடங்கி கருணாநிதி, ஸ்டாலின் வரை இந்நிலை தொடர்கிறது, இதில் ஏதேனும் மாற்றம் நடந்து இருக்கிறதா? அதனால் திமுக தன்னிலை உணர்ந்து தலித் தரப்பின் கேள்விக்கு இனிமேலாவது உரிய பதில் சொல்ல பழகவேண்டும் அல்லது குறைந்தபட்சம் சரி செய்கிறோம் என்றாவது சொல்ல வேண்டும். அதைவிடுத்து இப்படி பொய்யுறைத்தால் அதற்கான சரியான பதிலை திமுகவுக்கு தலித் தரப்பு தரும்.
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை புறகணித்துள்ளார். இது அண்ணாதுரை தொடங்கி ஸ்டாலின் வரை உண்மை நிலை இதுதான், இதை ஒவ்வொரு முறையும் மறக்க வைக்கிறது திமுக. தலித்களுக்கு மறதி அதிகம் என்பதால் எல்லோருக்கும் வசதியாக அமைந்துவிடுகிறது.
தற்போதைய திமுகவுக்கு இருக்கும் ஒரே நெருக்கடி ஒன்று மட்டும்தான் தமிழக மக்களுக்கு மோடியா ஸ்டாலினா என்றால் என்னையே தேர்வு செய்யுங்கள் நான் அவர்களை விட இந்துத்துவா கொள்கையும், சாதியைவும் பின்பற்றுவேன் என்கிறார் இதுதான் BJPயை எதிர்க்க திமுக கண்டுபிடித்த மாபெரும் ஆயுதம். இந்த நோய் தலித்களுக்கும் வந்துவிட்டதால் திமுக காட்டில் மழைதான்.
Comments
Post a Comment