நன்றி மறந்த திமுக

நன்றி மறந்த திமுக-குடிசை கொளுத்தியவர்கள் தியாகிகளா?




தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. 


1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் வன்னியர் சங்கம் தொடர் சாலைமறியல் நடத்துவதாக அறிவித்த பின்பு, அதற்கு முதல் நாள் செப்டம்பர் 16-ல் சென்னையில் திமுகவின் அண்ணா அறிவாலயம் கட்டடத்தை திறக்கும் முப்பெரும் விழா மாநாட்டை நடத்துவதாக கருணாநிதி அறிவித்தார். 


திமுகவின் மாநாடு முடித்து செல்கிறவர்கள் தமிழ் நாட்டின் வடமாவட்டங்களை கடக்கும் நேரமும், வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் தொடங்கிய செப்டம்பர் 17 அதிகாலை நேரமும் ஒன்றாக இருந்ததால், சாலைமறியலில் ஈடுபட்டவர்களுக்கும் திமுக கட்சியினருக்கு வாக்குவாதம் நடந்து கலவரமாக மாறியது.


வன்னியர்களுக்கும் திமுகவினருக்கும் விழுப்புரம் மாவட்டம் சுந்தரிபாளையம் என்ற கிராமம் அருகே பிரச்சினை ஏற்படவே திமுகவினர் தப்பிக்க அருகில் இருக்கும் சுந்தரிப்பாளையம் பறையர் குடியிருப்பில் தஞ்சம் அடைந்தனர். அங்குள்ள சுந்தரிப்பாளையம் பறையர் இன மக்கள் திமுக வினரை காப்பாற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத வன்னியர்கள் சுந்தரிபாளையம் கிராமத்தின் பறையர் வீடுகளை கொளுத்தினர். 


இந்த நிகழ்வுக்கு பிறகு இப்போராட்டம் வன்னியர் vs பறையர் என்றாகி தென்னாற்காடு மாவட்டத்தில் தொடர்ந்து 36 கிராமங்களில் இருந்த பறையர் குடியிருப்பை கொளுத்தினர். குறிப்பாக ஆலப்பாக்கம் கிராமத்தில் இருக்கும் குடிசைகளை வன்னியர்கள் கொளுத்தி சாதிய வன்முறைக்கு வழிவகுத்தனர்.  ஆலப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பெரியவர் L.இளையப்பெருமாள்  வன்னியர்கள் மற்றும் அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். வன்னியர்களின் வன்முறைக்கு முக்கிய காரணமாக திமுக வினரை காப்பற்றியதுதான் என்று மனித உரிமை கட்சி துண்டறிக்கையிலும் தெளிவாக  கூறப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்தமாக இப்பிரச்சனையை பார்த்தால் திமுகவினரை காப்பாற்றிய ஒற்றை காரணத்துக்காக பறையர்கள் தன் இருப்பிடம் முதல் பொருளாதார சரிவுகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். திமுகவினரை காப்பாற்றிய பறையர் சமூக மக்கள் இவ்வளவு இழப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காப்பாற்றிய மக்களை துரோகியாக்கி குடிசை கொளுத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்து அவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற்று சமூக நீதியை கேள்விக்கு உட்படுத்துகிறது திமுக அரசு.

Comments

Popular posts from this blog

சித்தர் மரபு பௌத்த மரபே

அறநிலையதுறையில் சாதியம்

மாநாடு