தலித் மக்களின் பிரச்சனையை பேசும் வானதி சீனிவாசன்

 

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் பஞ்சமி நிலம்  தொடர்பாக கர்நாடகம், மகாராஷ்டிரா போல தலித் மக்களுக்கு நிலம் கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசு முன் வரவேண்டும் என்று BJP யின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

மக்கள் நீதிக் கட்சியின் ஒருங்கிணைப்பில்
பஞ்சமி நில மீட்பிற்காக
நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே சிறப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி
ப.அம்பேத்வெங்கடேஷ்
அவர்களின் தலைமையில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 16.8.2021 தினத்தில் நடத்தப்பட்டது என்பதை இந்த தருணத்தில் நாம் வானதி சீனிவாசன் பேச்சுடன் இணைத்து பார்க்க வேண்டும்.


பஞ்சமி நிலம் தொடர்பாக தொடர்ந்து தலித் அமைப்புகள் போராடி அரசுக்கு அழுத்தம் தருகின்றனர். ஆனால் அரசுக்கு போதுமான அழுத்தம் ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் கடந்துபோகவே விரும்புகிறது. அதேசமயம் நாம் ஒருமித்த குரலில் எந்த விதமான போராட்டமும் அரசுக்கு எதிராக செய்யும் சூழலை வளர்த்துக் கொள்ளவும்யில்லை.

பஞ்சமி நிலம் தொடர்பான போராட்டத்தை தமிழகத்தில் தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு சில போராட்டங்களுடன் நின்று அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லாமல் இருக்கிறது.

அதே சமயம் இந்தியா முழுவதும் பஞ்சமி நிலம் இருக்கும் பட்சத்தில் மேலும் தமிழகத்தில் இது தொடர்பான விவாதமும் நடந்துகொண்டு இருக்கும்போது தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு என்னவென்று நமக்கு புரியவில்லை. அவர்கள் நினைத்தால் பாராளுமன்றத்தில் தலித் MPக்களை ஒன்றிணைந்து பஞ்சமி நிலம் தொடர்பாக விவாதம் நடத்தலாம், பகுஜன் மட்டுமே அப்படி திரட்டும் ஆளுமையுடன் திகழ்கிறது.

வானதி சீனிவாசன் பேச்சில் உள்நோக்கம் இருப்பதாக கூறும் நபர்கள் தலித் மக்களின் பிரச்சனைகளை பேசுவதில் எந்த கட்சிக்குத்தான்  உள்நோக்கம் இல்லை என்பதை கூற கடமைப்பட்டுள்ளனர். அதே சமயம்  தலித்கள் மட்டும் ஏன் ஒரு கட்சியை  நம்பி இருக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் தலித் மக்களின் பிரச்சனையை பேசுவது ஒரு ஆரோக்கியமானதாக தலித்கள் பார்க்க வேண்டும்.

திமுகவின் தலைமையகமான அறிவாலயம் பஞ்சமி நிலம் என்ற விவாதத்தை ஆதாரங்களுடன்  BJP மற்றும் PMK இரு கட்சிகளும் முன்னெடுத்து. அந்த விவாதத்தை வைத்து சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு தலித் கட்சிகளுக்கு இருந்தது. குறிப்பாக விடுதலை சிறுத்தை, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளுக்கு இருந்தது. ஆனால் அந்த விவாதத்தை பெரிதுபடுத்தாமல் தன் மக்கள் பிரச்சனை இல்லை என்பது போல தலித் கட்சிகள் நடந்துகொண்டன.

தற்போது வானதி சீனிவாசன் பேசியதை பயன்படுத்தி சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் ஒரு விவாதத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தலித் மக்கள் மற்றும் தலித் கட்சிகளுக்கு இருக்கிறது. அறிவாலயம் பஞ்சமி நிலம் என்ற விவாதத்தின்போது உள்நோக்கம் ஏமாற்று வேலை என்று கூறி மடைமாற்றம் செய்ததுபோல தற்போதும் செய்தால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை.

பகுஜனும் விடுதலை சிறுத்தையும் மக்களிடம் உரையாட வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து செயல்படவேண்டும். பஞ்சமி நிலம் தொடர்பான  வானதி சீனிவாசன் அவர்களை போன்று மற்ற கட்சிகள் ஏன் சட்டமன்றத்தில் குரல் எழுப்பாமல் அமைதியாக இருக்கிறது என்பதை நாம் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

Comments