இரும்பு மங்கை மாயாவதி
தற்போது நடைபெறும் உத்திரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் மற்றும் தேர்தல் நிலவரம் பற்றி அறிந்துகொள்ள எப்போதும் விட தற்போது கூடுதல் ஆவலாக உள்ளேன். காரணம் பெரிய மாநிலம் என்பதை கடந்து ஒரு தலித் நான்கு முறை முதல்வராக முடிந்த மாநிலம் மேலும் தலித் சமூகம் விழிப்படைந்த மாநிலமும் உத்திரபிரதேசம் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி 403 சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்து மிக தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த முறையும் பகுஜன் சமாஜ் பொது தொகுதியிலும் பட்டியல் சமூக வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை சந்திக்கிறது. கடைசியாக மாயாவதி முதல்வராக இருந்த சமயத்தில் கணிசமான பொது தொகுதியில் தலித் வேட்பாளர்கள் வெற்றிபெற்றிந்தது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு அடுத்து பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை ஆக்ரா போன்ற 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிறுத்தியுள்ளது. தனி தொகுதியை கடந்து பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் ஏற்படுத்திய தாக்கமே முக்கியம். அந்த வகையில் செல்வி மாயாவதியும் அவரது அரசியல் ஆளுமையே காரணம்.
சனாதன கட்சியான பிஜேபி கட்சியே பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு பொது தொகுதியில் தலித் வேட்பாளரை நிறுத்த திராவிட கட்சியால் முடியுமா? சனாதன கட்சியான பிஜேபி தலித் வேட்பாளரை நிறுத்துவதற்கு தலித் கட்சியான பகுஜன் அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அப்படி அழுத்தம் தர கூடிய தலித் கட்சிகள் இல்லை என்பதே எதார்த்தம்.
உத்திரப்பிரதேசத்தில் சிறப்பாக செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சி கூட தமிழகத்தில் தன்னுடைய அமைப்பு இருப்பதையே மறந்து விட்டது. கட்சின் அதிகார பூர்வமான நோட்டீஸ் போன்றவற்றில் ஒரு தமிழக தலித் தலைவர்களின் புகைப்படமும் இடம்பெறுவதில்லை என்பது வேதனையானது. பெரும்தலைவர் M.C.ராஜாவை உத்திரபிரதேச மாநில தலித் மக்களே எங்களின் தலைவர் என்று ஏற்றுக்கொண்டனர். ஆனால் குறைந்த பட்சம் அவரின் புகைப்படம் கூட பார்க்க முடிவதில்லை.
ஒருவேளை VCK ஏற்படுத்தும் என்று நினைத்தால் தன்னை ஒரு தலித் கட்சி என்பதை மறந்துவிட்டு அதுவும் பொது கட்சி மனநிலையில் இருக்கிறது.
தமிழகத்தில் அப்படி ஒரு நெருக்கடியை மற்ற பொது கட்சிகளுக்கு ஏற்படுத்த வேண்டிய நெருக்கடி நம் எல்லோருக்கும் இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதை முதலில் சாத்தியபடுத்திய செல்வி மாயாவதி உண்மையிலேயே இரும்பு மங்கைதான்.
Comments
Post a Comment