பூவை.மூர்த்தி - (1953-2002)
சென்னைக்கு மேற்கே பூந்தமல்லி அருகில் ஆண்டர்சன்பேட்டையை பூர்வீகமாக கொண்டவர். ஐந்தாம் வகுப்பு வரை சொந்தக் கிராமத்திலேயே இருந்த ஆரம்பப் பள்ளியில் படித்தார். திருமழிசை உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.-யை முடித்தார். (பிறகு பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் பியு.சி.-யும் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ.-வும் தஞ்சை புஷ்பம் கல்லூரியில் எம்.ஏ.-வும் படித்தவர் இறுதியில் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படித்து வழக்கறிஞரானார்.
கல்லூரி காலங்களில் மாணவ தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அந்தளவிற்கு சக நண்பர்களுடன் எளிமையாக பழகிக் தன்மை கொண்டவர். சென்னையில் M.C. ராஜா விடுதியில் தங்கி படித்த காலகட்டத்தில் ஆரிய சங்காரன் பேசும் கூட்டங்களில் கலந்துகொண்டு அவரது பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வர காரணமாக அமைந்தது.
முதலில் ஐதராபாத்தில் உள்ள ஆந்திர வங்கியில் வேலையில் அமர்ந்தார். பிறகு சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் இறுதியாக சென்னை ரிசர்வ் வங்கியில் பணியாற்றியபோது பட்டியல் மக்களுக்கு முழு நேரமும் பணியாற்றிட தன்னுடைய பணியை துறந்துவிட்டு சமூக பணிக்கு திரும்பினார்.
1978 ல் பூவிருந்தவல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் சாதி கொடுமைகளை ஒழிக்க சென்னை பூவிருந்தவல்லி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் டாக்டர் அம்பேத்கர் மன்றம் தொடங்கபட்டது. 1978 - விழுப்புரம் பெரிய காலனியில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு எதிரான வன்னியர் இன கலவரம் குறித்து வெகுண்டு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மூலமாக பூவிருந்தவல்லியில் மாபெரும் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தபட்டது.
1984 - சென்னையில் APLF-ன் முதல் மாநாடு, 1990 - "ஒரே ஒரு ஊரிலே" - திரைப்படம் எதிர்ப்புப் பேரணி, 1991 - ஆந்திர மாநிலம், குண்டூர் கிராமத்தில் தலித் மக்கள் படுகொலையைக் கண்டித்து பேரணி,1992 - பஞ்சமி நில மீட்புப் பேரணி, 1996 - அரகோணத்தில் அன்றய முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களை சிறப்பு அழைப்பாளராக வரவேற்று APLF-ன் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது,
1996 - மேலவளைவு முருகேசன் படுகொலையைக் கண்டித்துக் கண்டனக்கூட்டம் நடத்தியதில் திமுக அரசால் வழக்கு தொடுக்கபட்டது, அதில் A1- பூவை மூர்த்தியும், A2- ஜெகன் மூர்த்தி உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. மேலும் கட்சி தொண்டர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டாஸ் போன்ற ஒடுக்குமுறைகளை திமுக அரசு ஏவியது. மேலவளவு குற்றவாளிகளே விடுதலை பெற்று சுதந்திரமாக திரியும்போது, கண்டித்து போராடியவர்கள் இன்னம் வழக்கு முடியாமல் அலைவதுதன் திராவிட அரசுகளின் சாதனை.
1982-இல் அம்பேட்கர் மக்கள் நல மன்றமாக மாற்றினார். வளர்ச்சியின் போக்கில் 1988-இல் ஏராளமான இளைஞர்கள் அவரது பணியில் வந்து கலந்து கொள்ள, அதை இயக்கமாக மாற்றி அம்பேட்கர் மக்கள் விடுதலை முன்னணி என்று அதற்குப் பெயரிட்டார். அம்பேட்கர் பீபிள் லிபரேசன் பிரண்ட் என்ற அந்த அமைப்பை இளைஞர்கள் ஏ.பி.எல்.எப். (Ambedkar People Liberation Front) என்றனர். இயக்கத்தின் அடுத்த பரிணாமாக 20.9.1998 இல் புரட்சி பாரதம் என்ற கட்சியாக உருமாற்றினார். தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி போட்டியிட்டு வெற்றிபெறவில்லை என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே இருந்தது.
கொசுவம்பாளையத்தில் அருந்ததியர்களை வெளியேற்றிய போது அதைத் தடுத்தி நிறுத்தி, அங்கேஇருந்த 40 குடும்பங்களையும் அங்கே நிலை நிறுத்தி வாழ வகை செய்தார்.சித்துக்காடு கிராமத்தில் தலித்துகளிடமிருந்து பறிக்கப்பட்ட 40 ஏக்கர் நிலங்களை மீண்டும் பெற காரணமாக இருந்தார். இடம் இல்லாது இருந்த பட்டியல் மக்களுக்கு ஒரே இடத்தில் தங்கி வாழ கோடுவள்ளி என்ற இடத்தில் ஒரு கிராமத்தையே உருவாக்கித் முன்மாதிரி செயலை செய்தார். ஆவடி நகராட்சி மூலம் திருமுல்லைவாயலில் நரிக்குறவர்களுக்கும் குடியிருப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
குறைந்த வயதிலேயே பூவையார் உடல்நல குறைவால் செப்டம்பர் 2-ஆம் நாள் திங்கட் கிழமை முன்னிரவில் பரிநிப்பாணம் அடைந்தார். திருமணம் செய்யாமல் எளிய மக்களின் வாழ்விற்காக தன்னுடைய வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்தார் அவரின் பிறந்த நாளில் நாம் அவரை நினைவு கூர்வோம்.
Comments
Post a Comment