நீலதுண்டு கூத்தாநல்லூர் K. கிருஷ்ணமூர்த்தி


 

தலித் மக்களின் ஆக்கபூர்வமான போராட்டங்களை கையில் எடுத்து சாதித்துகாட்டிய பஞ்சமி நில மீட்பு போராளி அய்யா நீலதுண்டு கூத்தாநல்லூர் K. கிருஷ்ணமூர்த்தி அவர்களை நண்பர் முத்து பிரதிபன் சாக்கியா மற்றும் டேவிட்டுடன் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் எனக்கு ஏற்படுத்தியது.

1938யில் பிறந்து மருத்துவ உதவியாளராக தான் பணியாற்றிய அரசு பணியை துறந்து தன் இளமைக்காலம் முதல் மக்கள் பணியில் தற்போது வரை ஈடுபட்டு வரும் அய்யா அவர்கள் தன்னுடைய  போராட்ட அனுபவங்களை 84 வயதிலும் உற்சாகமாக சீர்காழி பனங்காட்டுத்தெருவில் இருக்கும் வீட்டில் எங்களுடன்  பகிர்ந்துகொண்டார். 

1967-70 காலகட்டத்தில் கும்பகோணம் அரசு கல்லூரியில்  படிக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து அம்பேத்கர் மன்றம் என்ற பெயரில் மாணவர் அமைப்பு தொடங்கி டாக்டர் அம்பேத்கர் படத்தை பல இடர்பாடுகளின் மத்தியில் கல்லுரியில் இடம்பெற செய்தார்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு தன் சொந்த கிராமத்து குழந்தைகளுக்கு இரவு பள்ளியை நடத்தினார். கல்லூரியில் நடத்தி வந்த அம்பேத்கர் மன்றத்தை இளைஞர்களுடன் இணைந்து விரிவுபடுத்த திருவாலி, கோட்டகம், புளியந்துறை நந்தியநல்லூர் போன்ற 60 கிராமங்களில் இரவு பள்ளிகளை ஆரம்பித்து நடத்தினார். 

முன்னாள் சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர் K.BS. மணி அவர்களிடம் ஆறாண்டுகள் உதவியாளராக பணியாற்றினார்.

இதுபோன்ற சமூக பணிகளால் ஈர்க்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் நாகை காயிதேமில்லத் மாவட்ட தலைவர் வடகரை நரியன் தெருவை சேர்ந்த C. செல்வநாதன் அய்யாவை அழைத்து கட்சியில் இணைந்து பணி செய்யுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் பணி செயதார்.

மாவட்ட செயலாளராக இருந்த காலத்தில் டாக்டர் அம்பேத்கர் பற்றி அம்பேத்கர் பேசுகிறார் என்ற குறுநூல் வெளியிட்டார். ராம்விலாஸ் பஸ்வானின் தலித் சேனாவில் சில காலம் பணியாற்றிவயுள்ளார், தலித் சேனாவில் இருந்து வெளியேறி விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். மாநில விவசாயபிரிவு துனைசெயலாளராக பனிபுரிந்தார்

சீர்காழியில் தலித் பெண்ணை ஆபாசமாக வீடியோ வெளியாகி பிரச்சனை எழுந்தபோது அதை கண்டித்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆய்வாளர் முருகவேல், DSP சுவாமிநாதன் ஆகியோர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியதற்கு காவல்துறை வழக்கு பதிவு செய்து இரவு 12 மணிக்கு வீட்டிற்கு வந்த காவல்துறை சரமாரியாக அடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் மறுபடியும் காட்டுமிராண்டி தனமாக அடித்தில்  கேட்கும் திறனை இழந்தார்.

கொடக்காரமூலை கிராமத்தில் குப்புசாமி நாயுடு என்பர் 200க்கும் மேற்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து தலித் மக்களை ஏமாற்றி வந்தார். மக்களிடம் ஊர்பணம் பெற்று அதனை சட்ட ரீதியாக வழக்கறிஞர் சடாசரம் அவர்கள் மூலமாக போராடி 74 ஏக்கர் நிலத்தை மீட்டு நிலமற்ற சுக்கிரி, செல்லையன், நடேசன், கல்யாணம் போன்ற 20க்கும் மேற்பட்ட நிலமற்ற புளியந்துறை மக்களுக்கு வழங்கினார்.

சீர்காழியின் புறநகர்ப் பகுதியில் இருந்த  3 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு சமூக தலைவர் KBS மணியின் பெயரில் நகரை உருவாக்கி 100க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் வசிப்பதற்கு வழிவகை செய்தார்.

இவ்வளவு களப்பணிகள் செய்து கடைசியாக தான் முதலில் தொடங்கிய அம்பேத்கர் மன்றத்தை மறுபடியும் கட்டமைத்து தற்போதும் பஞ்சமி நில மீட்புக்கு போராடி வருகிறார். சீர்காழி புதிய பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் பன்னிர் செல்வம் நகரில் சர்வே எண் 443-1A,1B,1C கொண்ட மொத்தம் 10 ஏக்கர் 11 சென்ட் பஞ்சமி நிலம் அதில் சர்வே எண் 443-1A,1B, இடத்தை எடுத்து அரசு எடுத்து மருத்துவமனையை கட்டிவிட்டது. மீதம் உள்ள சர்வே எண் 443-1C யில் 2 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை வழக்காடி வென்றுள்ளார். மக்களிடம் வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பதால் தடைபட்டு நிற்கிறது அதற்கான சட்ட போராட்டமும் அம்பேத்கர் மன்றம் சார்பாக நடத்தி வருகிறார்.

தன் வாழ்க்கையில் எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை கண்ட நிலையிலும் என்றைக்கும் நீலதுண்டு அணிவது விட்டதில்லை அதன் காரணமாக இவரை மக்கள் நீலதுண்டு கூத்தாநல்லூர் K. கிருஷ்ணமூர்த்தி என்றே அழைக்கின்றனர். பாபாசாகிப் வழியில் தனது துனைவியாரோடு பௌத்தம் ஏற்றுகெளதமன்-கெளதமி என"தமது பெயர்களை மாற்றிக்கொன்டுள்ள்ளார் தன்னை இளைய சமுகத்துக்கு இன்றும் முன்னுதாரணமாக திகழ்கிறார். தான் ஏற்றுகொண்ட கொள்கைக்கு நேர்மையாக பணியாற்றி இருக்கும், இதுபோன்ற தலைவர்களை நாம் நினைவுகூர்வது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நம் கடமையாகும். இறுதியாக என் இறப்புக்கு பிறகு  பௌத்த முறைபடி அடக்கம் செய்யவேண்டும் என்றும் நீலதுண்டை என் உடலில் போர்த்த வேண்டும் என்று நண்பர் பிரதிபனுடன் கூறும்போது நாங்கள் நெகிழ்த்துபோனோம்.

Comments

  1. சமரசமில்லாபோராளியின்"போரட்டவரலாறுகளைஆவணமாக்கும்"முயற்சியில்ஈடுபட்டுவரும் தங்களை வாாழ்த்துகின்றேன்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி தளபதி

    ReplyDelete
  3. மகிழ்ச்சி தளபதி

    ReplyDelete
  4. முத்து சார்.. வாழ்க

    ReplyDelete

Post a Comment